ஜனதா கேரேஜுக்கு குறி வைக்கும் விஜய்

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (14:53 IST)
ரீமேக் படங்கள்தான் பலநேரம் விஜய்யை கை தூக்கிவிட்டிருக்கிறது. அவரது கரியரில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்த கில்லி, போக்கிரி இரண்டும் தெலுங்குப் படங்களின் ரீமேக்.


 
 
சமீபத்தில் ஜுனியர் என்டிஆர், மோகன்லால் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ஜனதா கேரேஜ் சூப்பர்ஹிட்டானது. 
 
அதுபோன்றதொரு வெற்றியை குறி வைத்து எடுக்கப்பட்டதுதான் ஜில்லா. கதை, திரைக்கதை, காட்சிகள் என்று அனைத்திலும் ஜில்லா சொதப்பியது.
 
இந்நிலையில், ஜனதா கேரேஜின் ரீமேக்கில் நடிக்கலாமா என்ற யோசனை விஜய்க்கு ஏற்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்