ஜேம்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! – புனித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (11:51 IST)
புனித் ராஜ்குமார் நடித்து சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட திரைப்பட உலகின் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் புனித் ராஜ்குமார் மறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரது கடைசி படமான ஜேம்ஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சேத்தன் குமார் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்திருந்த நிலையில் புனித் ராஜ்குமார் உயிரிழந்ததால் அவருக்கு பதிலாக அவரது அண்ணன் சிவராஜ் சிவகுமார் டப்பிங் பேசினார். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 17 புனித் ராஜ்குமார் பிறந்தநாள் அன்று வெளியானது.

தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள சோனி லிவ் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்