ரஜினியோடு மோகன்லால்… ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அட்டகாச போஸ்டர்!

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:28 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.

படத்தின் டிரைலரில் ரஜினிகாந்த் தவிர பிற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. டிரைலரில் மோகன் லால் ஒரு வினாடி கூட இடம்பெறவில்லை. இதனால் மோகன்லால் ரசிகர்கள் சிறிது அதிருப்தியை வெளியிட்டனர்.

இந்நிலையில் இப்போது ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினியோடு மோகன்லால் அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டரை வெளியிட்டுள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் “யார் யாரெல்லாம் இந்த காம்போவை காண ஆவலாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்