தலைவருக்கு எழுதிய முதல் பாடல்...என் குழந்தைகளுக்காகவும் தான்- விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (11:45 IST)
ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்ற பாடல் பற்றி விக்னேஷ் சிவன் நெகிழ்ழ்சியுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நாளுக்கு நாள் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்  நேற்று  ஜெயிலர் படத்தின் 4 வது பாடலான ரத்தமாரே என்ற பாடலை இன்று படக்குழு வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்பாடல் 17 மணி  நேரத்தில் 14 லட்சம் வியூஸை பெற்றுள்ளது. 76 ஆயிரம் லைக்ஸுகள் பெற்றுள்ளது. 3 அயிரம் பேர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்பாடல் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ''தலைவர் ரஜினிகாந்திற்கு நான் எழுதியுள்ள முதல் பாடல் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்ற பாடல். இப்பாடல் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்ககவும் தான் ''என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

First song written for #Thalaivar #SuperStar #Rajinikanth @rajinikanth also becomes my first song written for my babies #Uyir , #Ulag ❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்