அதர்வா & மணிகண்டன் நடிக்கும் மத்தகம் தொடரின் டிரைலர் ரிலீஸ்!

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (13:46 IST)
சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதனால் கவனிக்கப்படும் கதாநாயகர்களில் ஒருவராகியுள்ளார் மணிகண்டன். இந்நிலையில் அவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் மத்தகம் என்ற வெப் சீரிஸ் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த தொடரின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கிரைம் திரில்லர் பின்னணியில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளதை டிரைலர் உறுதிபடுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்