தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்… ஜான்வி கபூர் விருப்பம்!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (14:53 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியின் நானும் ரௌடிதான் படத்தைப் பலமுறை பார்த்துள்ளதாக சொல்லும் அவர் அவரோடு நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே தனுஷ் படத்தில் நடிக்கவைக்க அவரை அனுகியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்