வெளியானது ஜகமே தந்திரம்… ரசிகர்கள் ஏமாற்றம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (13:26 IST)
ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருந்தது நெட்பிளிக்ஸ்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாகும் என நெட்பிளிக்ஸ் தரப்பில் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணி முதலே ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் படம் நண்பகல் 12 மணிக்கு மேல்தான் ரிலீஸானது. இதனால் ரசிகர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அமேசான் ப்ரைமில் எல்லாம் நள்ளிரவிலேயே ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்