பிரபாஸ் மும்பை தொழிலதிபரின் பேத்தியுடன் திருமணமா?

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (17:50 IST)
பிரபாஸ் மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை திருமணம் செய்துக்கொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
பாகுபலி திரைப்படம் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான பிரபாஸ், பாகுபலி படத்தில் நடிப்பதற்காக திருமண வரன்களை எல்லாம் நிராகரித்து விட்டாராம். படம் வெளியான பின் அவருக்கு பெண் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. 
 
இதைத்தொடர்ந்து பாகுபலி 2 படத்தில் அனுஷ்கா, பிரபாஸ் ஜோடி ரசிகர்களை கவர்ந்துவிட்டது. இதனால் இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி ஆனால் நல்லா இருக்கும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
 
இந்நிலையில் பிரபாஸ் மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்