
பிக்பாஸ் சீசன் 9-ல் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டது யார் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் பிக்பாஸ் சீசன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் திட்டமிடல் இல்லாமல் தன் போக்கில் விளையாடி வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். முன்னதாக ப்ரவீன் காந்தி, அப்சரா சிஜே எவிக்ஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வெளியேறுபவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த மொமெண்ட்களை வீடியோவாக போட்டுக் காட்டுவது வழக்கம். அப்படி தயாரித்த வீடியோவையும் ஆதிரை பார்க்கவில்லை என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது. இது உண்மைதானா என்பது இன்றைய பிக்பாஸ் எபிசோடில் தெரிய வரும் என்பதால் இன்றைய எபிசோட் மீது ஆடியன்ஸுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
Edit by Prasanth.K