பாசமலர்கள் பாரு - திவாகர் இடையே வெடித்த மோதல்! பிக்பாஸில் திடீர் திருப்பம்! Biggboss season 9 Tamil

Prasanth K

புதன், 22 அக்டோபர் 2025 (13:21 IST)

பிக்பாஸ் 9வது சீசனின் பரபரப்பான மூன்றாவது வாரத்தில் பாசமலர்களாக சுற்றித் திரிந்த விஜே பார்வதி - வாட்டர்மெலன் திவாகர் இடையே மோதல் முற்றியுள்ளது.

 

ஜூஸ் மேக்கிங் டாஸ்க்கில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் சேர்த்து வாட்டர்மெலன் திவாகர், பார்வதி, வியன்னாவை டார்கெட் செய்தனர். அதில் திவாகர் அதை கேஷுவலாக எடுத்துக் கொண்டாலும், பார்வதி தன்னை டார்கெட் செய்து குவாலிட்டி செக்கருக்கு தள்ளிவிட்டதாக கூறி வந்தார்.

 

நேற்று நடந்த ஜூஸ் மேக்கிங் டாஸ்க்கிலேயே பலரது ஜூஸ் பாட்டில்களை பாரு - திவாகர் குவாலிட்டி செக் செய்து தரமற்றது என நீக்கினார்கள். இந்நிலையில் இன்று ஜூஸ் டாஸ்க் தொடரும் நிலையில் ஏற்கனவே ஜூஸ் கடைக்காரர்களாக இருக்கும் லக்ஸரி ஹவுஸை சேர்ந்த ஆதிரை, எஃப் ஜே உள்ளிட்டோர் குவாலிட்டி செக்கர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.

 

இந்நிலையில் தற்போதைய இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர்மெலன் ஸ்டார் - பாரு இடையே மோதல் வெடித்துள்ளது. ஹவுஸ்மேட்ஸுக்கு சாதகமாக திவாகர் பேசுவதாக பாரு குற்றம் சாட்டி கோபமாக செல்கிறார். திவாகர் சமாதானப்படுத்த முயன்றபோதும் அவர் தேவையற்ற வார்த்தைகளை பேச இதனால் திவாகரும் கோபப்பட பிரச்சினை பெரிதாக வெடித்துள்ளது,

 

இத்தனை நாளும் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் பாருவுக்கு எதிராக நின்றபோதும் கூட ஸ்வீட் சாப்பிட்டுக்கொண்டே ஸ்வீட்டாக ஆறுதல் சொல்லி வந்தவர் வாட்டர்மெலன் திவாகர். அண்ணன் அண்ணன் என்று பாருவும் அவரிடம் க்ளோஸாக இருந்தார். அப்படியாக பாசமலர்களாக பிக்பாஸ் வீட்டில் சுற்றித் திரிந்த இவர்களிடையே மோதல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்