கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக உயர்ந்து கலக்கி வருகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.
தற்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் இன்று இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக ராஷ்மிகா இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அவர் தற்போது கன்னட திரையுலகை மதிக்காமல், அவமரியாதை செய்வதாக அவர் மீதுக் குற்றச்சாட்டும் உள்ளது.
ஆனால் அவர் இந்தி, தெலுங்கு என பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் பரவின. இந்நிலையில் சமீபத்தில் அவர் மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்தபடி வந்த அவர் பத்திரிக்கையாளர்கள் ஃபோட்டோவுக்கு போஸ் கேட்டபோது “முகத்தில் சிகிச்சை நடந்துள்ளது.” எனக் கூறி போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். இது சம்மந்தமான வீடியோ வைரல் ஆகி வருகிறது.