எந்த சவுண்ட்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்ட்டுக்கு வெட்டுவேன்னு தெரியாது… பாலய்யாவின் ‘அகாண்டா 2’ தமிழ் டீசர்!

vinoth

ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (10:56 IST)
தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்த அகாண்டா திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கலக்கியது. இந்த படத்தைப் போயப்பட்டி சீனு இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கூட்டணியில் அகாண்டா பார்ட் 2 உருவாக உள்ளதாக 2022 ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. அதையடுத்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து தற்போது அகண்டா படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. வழக்கமான பாலய்யா ஸ்டைல் ஆக்‌ஷன் காட்சிகளோடு அறிமுகமாகும் இந்த டீசரில் “சவுண்ட்ட கண்ட்ரோல்ல வச்சிக்கோ.. ஏன்னா எந்த சவுண்ட்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்ட்டுக்கு வெட்டுவேன்னு எனக்கேத் தெரியாது. உன்னால இமேஜின் பண்ணவே முடியாது” என பன்ச் அடிக்கிறார். இந்த டீசர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்