பான் இந்தியா படத்தில் ஆசை உள்ளதா? சூப்பர் ஸ்டார் தகவல்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (18:23 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு பான் இந்தியா படம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு, கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் யுகாதி தினத்தை முன்னிட்டு சர்காரு பாட்டா படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதில், வரும் மே மாதம்12 ஆம் தேதி  மகேஷ்பாபுவின்  'சர்க்காரு வாரு பாட்டா ' படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இ ந் நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களான, அல்லு அர்ஜூன், என்.டி.ஆர்,. ராம்சரண், பிரபாச் உள்ளிட்ட நடிகர்கள் இந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டனர்.

சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷூம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார்.  

இந்நிலையில், சர்க்காரு வாரு பாட்டா படத்தின் புரமோஷன்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகேஷ்பாபு, பான் இந்தியா படத்தில் நடிக்க ஆசையில்லை எனவும், தெலுங்கு படத்தில் நடிக்க மட்டுமே ஆசை எனவும், அதை இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜமெளலியின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்