ரசிகரிடம் அஜித் அப்டேட் கூறியது உண்மைதானா?

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (18:23 IST)
தல அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 
 
இந்த படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக அடுத்த மாதம் படக்குழுவினர் ஸ்பெயின் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் அஜித்தை அவரது தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர் வலிமை அப்டேட் குறித்து கேட்டதாகவும், அஜித் அதற்கு இம்மாத இறுதியில் வலிமை அப்டேட் வரும் என்று கூறியதாகவும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
 
இந்த நிலையில் இது குறித்த கருத்து தெரிவித்த வலிமை படக்குழுவினர் அஜித் எந்த ரசிகரரிடமும் அப்டேட் குறித்து எதுவும் கூறவில்லை என்றும், அவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்