#INDvsENG டெஸ்ட்; இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 263/3

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:55 IST)
இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

காலை 9:30க்கு தொடங்கிய இப்போட்டியில் கேப்டம் ஜோரூட்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் ரோரி பேரஸ்சும், சிப்லியும் களமிறங்கினர்.

முதல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அடுத்து,  லாரன்ஸ் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.மதியவுணவு இடைவேளையில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் டாம் சிப்லி  பொறுமையாக ஆடினார். இவரது துணையால் ஜோ ரூட் சதம் அடித்தார். இவர்களின் பார்ட்னர் ஷிப்பால் நிதானமாக ஆடி ரன் சேர்க்கப்பட்டது.

ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களால் 80 ஓவர்களைத் தாண்டிய பிறகும் விக்கெட் எடுக்க முடியவில்லை.

அடுத்து பும்ராவின் பந்தில் சிப்லி  87 ரன்களில் LBW ஆனார். டாம் சிப்லி மற்றும் ஜோடிரூட் 3 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 200 ரன்கள் குவித்தனர்.

டாம் சிப்லியின் அவுட் ஆனதை அடுத்து முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 எடுத்துள்ளது.#Root #INDvENG

ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 128 ரன்களுடன்  இருக்கிறார். நாளையும் அவரது அதிரடி தொடரும் எனத் தெரிகிறது. இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகள், அஷ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ்வா மர்டர் பார்த்திருங்கிளா? #Root #INDvENG pic.twitter.com/5ZT7NoeX74

— #Master (@_imjone) February 5, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்