என்னது! ராஜமாதா சிவகாமியை கட்டப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டாரா? வைரலாகும் செய்தி

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (05:25 IST)
சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா கேரக்டர்களை அடுத்து அனைவரையும் கவர்ந்த கேரக்டர்கள் ராஜமாதா சிவகாமி மற்றும் கட்டப்பா. இந்த இரண்டு கேரக்டர்கள் தான் கதையை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும்



 


ராஜமாதா சொல்லும் கட்டளையை நிறைவேற்றும் ஒரு விசுவாசியாக கட்டப்பா இந்த படத்தில் இருப்பார். ஆனால் திடீரென சிவகாமியும், கட்டப்பாவும் திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்? அனைவருக்கும் ஷாக்!

ஆனால் இது நடந்தது 'பாகுபலி' படத்தில் இல்லை. விளம்பர படத்தில். கட்டப்பா ராஜா வேஷத்தில் இருக்க, ராஜமாதா ராணி வேடத்தில் இருக்க இருவரும் கணவன் மனைவி போன்ற விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றது.

இந்தியா மட்டுமின்றி உலகமே போற்றும் இரண்டு கேரக்டர்களை இப்படி பணத்துக்காக கேவலப்படுத்திவிட்டார்களே சத்யராஜூம் ரம்யாகிருஷ்ணனும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெறும் படத்திற்காகத்தான் என்றாலும் ஒரு கேரக்டர் மனதில் பதிந்துவிட்டால் அந்த கேரக்டர் அவ்வளவு சீக்கிரம் வெளியே போகாது. பாசமலர் படத்திற்கு பின்னர் சிவாஜியும், சாவித்திரியும் ஜோடியாக நடித்த படம் எதுவும் வெற்றி பெறாததற்கு அந்த அண்ணன் தங்கை கேரக்டர் மனதில் பதிந்ததே காரணம்
அடுத்த கட்டுரையில்