இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான நடராஜன் இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்சமாக இருந்து வருகிறார். தமிழகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர் மட்டுமெ இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்புகளைப் பெற்று வந்த நிலையில் அதில் பிற்படுத்திய வகுப்பில் இருந்து சென்ற நடராஜன் தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளார். இதனால் தமிழகத்தி நடராஜனுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நடராஜன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க எடுக்க தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடராஜனிடம் வீடியோ கால் மூலமாக பேசியதாகவும், அப்போது அந்த உரிமையை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக நடிகர் சதீஷ் இருவரும் பேசிக்கொண்ட ஸ்க்ரீன்ஷாட்டை வெளியிட்டுள்ளார்.