வெற்றிமாறன் சசிகுமார் இணையும் படத்தின் இயக்குனர் இவர்தான்!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:40 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறனும் சசிகுமாரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், வட சென்னைஉ, அசுரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் பட்டியலில் வெற்றிமாறன் இடம்பெற்றார். அடுத்து சூரி நடிக்கும் ஒரு படம் மற்றும் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தனது முதல் படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து அவர் ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்துல் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு கதை திரைக்கதை ஆகியவற்றை வெற்றிமாறனே எழுதியுள்ளார். இதையடுத்து இந்த படத்தின் இயக்குனராக வெற்றிமாறனின் உதவியாளர் மணிமாறன் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்