'லியோ' படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்களுக்கு அபராதம் விதிப்பு

வியாழன், 19 அக்டோபர் 2023 (12:52 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம்  இன்று (அக்டோபர் 19 ஆம் தேதி)  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.
 
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், லியோ படம்  பார்க்க வந்த ரசிகர்களின் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டை தியேட்டரில் இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்தி சென்ற ரசிகர்கள் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து, அதற்கான ரசீதை வாகனங்களில் போலீஸார் வைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்