தெலுங்கில் ரிலீசாகிறது இரும்புத்திரை

வியாழன், 17 மே 2018 (16:43 IST)
விஷாலின் இரும்புத்திரை திரைப்படம் தெலுங்கில் மே மாதம் இறுதியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
 
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான இரும்புத்திரை படத்தில் சமந்தா, அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்த படம் கடந்த வாரம் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இதுநாள் வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
 
இந்த நிலையில் இரும்புத்திரை படம் அபிமன்யுடு என்ற பெயரில் தெலுங்கில் மே கடைசி வாரத்தில் வெளியாகிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்