அதர்வாவின் செம போத ஆகாதே ரிலீஸ் தேதி மாற்றம்

வியாழன், 17 மே 2018 (11:04 IST)
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாத’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மிஸ்தி மற்றும் அனைக்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட் செய்துள்ளார். கிக்காஸ்   எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் அதர்வாவே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர்,  மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்தப் படம் மே 18-ஆம் தேதி வெளியாக  இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தயாரான படங்களுக்கு வழிவிடும் வகையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள்  கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்