''எடுத்த மாதிரியே சினிமா எடுத்தால்'' -பாலிவுட்டுக்கு இரானிய இயக்குனர் எச்சரிக்கை

புதன், 16 ஆகஸ்ட் 2023 (20:43 IST)
பாலிவுட் சினிமா தன்னை சிறப்பாக மேம்படுத்தாவிட்டால் இது வருங்காலத்தில் பிரச்சனையாக உருவாகலாம் என்று இரானிய இயக்குனர் மஜித் மஜிதி தெரிவித்துள்ளார்.

உலக சினிமா வரிசையில் உலகெங்கும் உள்ள ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளது இரானிய திரைப்படங்கள்.

இதில், வெளியான சில்ரன் ஆப் ஹெவன், தி கலர் ஆப் பாரடைஸ் உள்ளிட்ட உலகத் தரமான படங்களை இயக்கியுள்ளவர் இரானிய இயக்குனர் மஜித் மஜிதி.

இவர், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், '' இந்தியாவில் சினிமா உருவாக்குவதற்கு நல்ல திறமை மற்றும் ஆற்றலுள்ளது என்று நம்புகிறேன்.  இங்கு சொல்லவேண்டிய கதைகள் நிறைவுள்ளது.

ஆனால், பாலிவுட் அத்திறனை சரியாகப் பயன்படுத்தவில்லை… இனிவருங்காலத்தில் பாலிவுட் தன்னை மேம்படுத்தாவிட்டால் அது பிரச்சனையாக மாறலாம். எடுத்த மாதிரியே சினிமா எடுத்தால், 4 ஆண்டுகளில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் '' என்று எச்சரித்துள்ளார்.

மேலும், ''ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் சினிமா எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்