இது கமல் படமா? இல்ல சித்தார்த் படமா? – இந்தியன் 2 டிரைலர் பார்த்த பத்திரிக்கையாளர் குழப்பம்!

vinoth
செவ்வாய், 25 ஜூன் 2024 (15:02 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது, பத்திரிக்கையாளர்களுக்கு டிரைலர் திரையிட்டு காட்டப்பட்டது. அதைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் சிலர் டிரைலரில் கமல்ஹாசனை விட சித்தார்த் வரும் காட்சிகள்தான் அதிகமாக உள்ளன. இது கமல் படமா? இல்லை சித்தார்த் படமா? என டிரைலர் மீதான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்