கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. படத்தில் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஜூலை மாதத்தோடு முடியும் எனவும், அதன் பிறகு சில மாதங்கள் மற்ற நடிகர்களை வைத்து இன்னும் சில மாதங்கள் ஷூட்டிங் நடக்கும் என சொல்லபப்படுகிறது.
முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இப்போது கமல் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்ட பிராஜக்ட் கே திரைப்படமும் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரே நாளில் கமல்ஹாசன் நடிக்கும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது இதற்காக இரண்டு படங்களின் வேலைகளையும் விரைந்து முடிப்பதில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் சென்னை ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்த 1.24 கோடி ரூபாயை கட்டணமாக செலுத்தி படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர்.
ஆனால், அங்கு திடீரென சில நிபந்தனைகள் விதித்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, departure ஏரியாவுக்கு மட்டுமே அனுமதி கொடுத்து Lavatoryல்ஷூட்டிங் நடத்தக்கூடாது என நிறுத்தியுள்ளார்களாம். இதனால் மீண்டும் தயாரிப்பு நிறுவும் சில கோடிகள் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.