'இந்தியன் 2 ' - 2 நிமிட காட்சிக்காக இத்தனை கோடியில் செட்டா? பலே ஷங்கர்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (11:01 IST)
1996ம் ஆண்டு கமல்ஹாசன், மனிஷா கொய்ரா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் இந்தியன். சுதந்திர போராட்ட வீரரான கமல், அரசு வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக செயல்படுகிறார்.



அதனால் அவரது மகள் கஸ்தூரியை பறிகொடுக்கிறார். இதனால் கோபம் அடையும் கமல், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை இந்தியன் தாத்தா என்ற பெயரில் கொலை செய்கிறார். தனது மகன் (கமல்) லஞ்சம் வாங்கியதால் குழந்தைகள் உயிரிழந்ததை அறிந்த கமல் அவரையும் இறுதியாக கொன்றுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடுகிறார்.  ஷங்கர் இயக்கிய இந்தபடம் சூப்பர்ஹிட்டானது. லஞ்சத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் அன்றைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகமாக இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ‌ஷங்கரே மீண்டும் இயக்குகிறார். 
 
இந்தியன்-2  படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். 
 
முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் முதியவர் தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் அவருக்கு மீண்டும் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ‌கூறப்படுகிறது.
 
சென்னையில் நேற்று (14-ந்தேதி) படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளனர். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகின்றனர். அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட அரங்கை அமைத்து வருகிறார்கள். 2 நிமிட காட்சிக்காக இந்த அரங்கை அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்