'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்தது 2.0

செவ்வாய், 11 டிசம்பர் 2018 (13:34 IST)
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.



சென்னையில் இன்று வரை  நன்றாக கல்லா கட்டி வருகிறது 2.0 படம்.  இதனால், சென்னையில் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் 'பாகுபலி 2' சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
பலரும் எதிர்பார்த்தது போலவே சென்னையில் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள வசூல்படி 19 கோடியை கடந்தது. இதன் மூலம் 18.85 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் இருந்த 'பாகுபலி 2' படத்தை 2-வது இடத்துக்கு தள்ளியது '2.0'.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்