தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். குறும்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்த பல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது தமிழைத் தாண்டியும் தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்து கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் பிரபல ஆங்கில பாடகர் எட் ஷீரனுடன் ஒரு ஆல்பத்துக்காகக் கைகோர்க்கவுள்ளார். இதுபற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் எட் ஷீரன், ஹனுமான்கஇண்ட், தீ மற்றும் நான் ஆகியோர் இணைந்து ஒரு பாடலை உருவாக்கவுள்ளோம். அந்த ஆல்பத்தை நானே தயாரிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். எட் ஷீரன் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர். அவரின் ஷேப் ஆஃப் யு உலகளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.