சிவகார்த்திகேயன் படத்தில் யோகி பாபு

வியாழன், 19 ஏப்ரல் 2018 (15:35 IST)
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், யோகி பாபுவும் ஒப்பந்தமாகியுள்ளார். 
சிவகார்த்திகேயன் தற்போது ‘சீம ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கிவரும் இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப்  படத்துக்குப் பிறகு, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாகும் இந்தப் படத்தில், ரகுல்  ப்ரீத்சிங் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில், காமெடியனாக நடிக்க கருணாகரன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்னொரு காமெடியனாக யோகி பாபு  ஒப்பந்தமாகியுள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்