ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித்; ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் தகவல்

செவ்வாய், 20 மார்ச் 2018 (11:17 IST)
பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் ஷிட்டட் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித் நடிக்க உள்ளார். அதனை  ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது உறுதியாகியுள்ளது. 
கரண் ஜோஹர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது ஷிட்டட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஶ்ரீதேவி  நடிக்கவிருந்தார். அவர் திடீர் மறைவை அடுத்து, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாதுரி தீட்சித் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
படக்குழு ஶ்ரீதேவி இறந்துவிட்டதால், படத்தை கைவிட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, ஷிட்டட் படத்தில் நடிகை ஶ்ரீதேவிக்கு பதிலாக, மாதுரி  தீட்சித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். மேலும் அதில் என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்தப் படத்தில் அம்மாவிற்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பதற்கு நானும்,  எனது தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்