‘போதை கதை’யில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:45 IST)
‘போதை கதை’ என்ற பாடலில் அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
படங்களை இயக்கிவரும் கெளதம் மேனன், தன்னுடைய ஒன்றாக ஒரிஜினல்ஸ் மூலம் தனிப்பாடல்களையும் இயக்கி வருகிறார். ‘கூவை’ என்ற முதல் பாடலை இதில் வெளியிட்டனர். மதன் கார்க்கி வரிகள் எழுத, பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைக்க, சின்னப்பொண்ணு பாடலைப் பாடியிருந்தார். அதில், சின்னப்பொண்ணு மற்றும் சதீஷ் குழுவினர் நடனமாடி இருந்தனர். கெளதம் மேனன் இயக்கினார்.
 
அதன் பிறகு ‘உலவிரவு’ என்ற தனிப்பாடலை வெளியிட்டனர். கெளதம் மேனன் இயக்கிய இந்தப் பாடலில், டொவினோ தாமஸ் மற்றும் டிடி இருவரும் நடித்தனர். மதன் கார்க்கி பாடல் எழுத, கார்த்திக் இசையமைத்துப் பாடியிருந்தார்.
இந்நிலையில், மூன்றாவது பாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார் கெளதம் மேனன். வழக்கம்போல் கார்த்திக் இசையமைக்க, மதன் கார்க்கி பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்