சிங்கத்துக்குள் இத்தனை சீன்களா...? திரையுலகம் திகைப்பு

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (17:58 IST)
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் எஸ் 3 டிசம்பர் 23 வெளியாகிறது.

 
பொதுவாக ஒரு படத்தில் 60 முதல் 80 காட்சிகள் இருக்கும். ஆனால், எஸ் 3 படத்தில் 365 காட்சிகள் வைக்கப்பட்டுள்ளனவாம். இது கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கான காட்சிகள்.
 
பாஸ்ட் பார்வர்டில் படத்தை ஓட்டினாலும் இத்தனை காட்சிகளை வைக்க முடியாதே... திரையுலகம் இந்த அதிசய செய்தியால் திகைத்துப் போயுள்ளது.
அடுத்த கட்டுரையில்