கொடிவீரனில் சசிகுமாருடன் மோதும் பிரபல நடிகர்!

வெள்ளி, 2 ஜூன் 2017 (16:07 IST)
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் இரண்டாவதாக நடித்துவரும் படம் ‘கொடிவீரன்’. ராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மகிமா நம்பியார், ‘ரேணிகுண்டா’ சனுஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.  இந்நிலையில், நடிகை பூர்ணாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

 
ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் மேலும் இப்படத்தில் நடிகர் விதார்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார், இவர் தான் படத்தில் வில்லன் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இப்படம் வழக்கமான செண்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
இப்படம் சசிகுமாரின் 'சசிகுமார் புரடொக்ஷன்ஸ்' நிறுவனத்தின் 10வது படமாக உருவாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்