பாலிவுட்டில் களமிறங்கும் பிரபாஸ்

Webdunia
புதன், 10 மே 2017 (12:12 IST)
‘பாகுபலி’ மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த பிரபாஸ், நேரடி ஹிந்திப் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

 
இரண்டு பாகங்களாக வெளிவந்த ‘பாகுபலி’ படத்துக்காக பிரபாஸ் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஐந்து வருடங்களாக சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட தியாகம் செய்துவிட்டு கடினமாக உழைத்தார். அதற்கான பலன் தான், 1000 கோடி  கிளப்பில் பிரபாஸ் இணைந்தது.
 
இதனால், அவரைத் தங்கள் படங்களில் நடிக்குமாறு பல தயாரிப்பாளர்கள் கேட்டு வருகின்றனர். தற்போது ‘சாஹு’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. அடுத்த வருடம்தான் இந்தப் படம் ரிலீஸாகப் போகிறது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு, பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறார் பிரபாஸ் என்கிறார்கள். இவை, நேரடி ஹிந்திப் படங்களாக இருக்குமாம். இதன்மூலம் கான் நடிகர்களுடன் நேரடியாக மோதப்  போகிறார் பிரபாஸ்.
அடுத்த கட்டுரையில்