கலைஞர் எனக்கு தந்தைக்கு சமமானவர்! – இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (08:46 IST)
கோவையில் நடந்து வரும் இசை நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்கு தந்தைக்கு நிகரானவர் என பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வயது மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார். தற்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளான நேற்று கோவையில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி குறித்து நினைவு கூர்ந்த இளையராஜா “எனக்கு கலைஞர் தந்தைக்கு சமமானவர். எனக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர். அவர் வழியிலேயே முதல்வரும் நாட்டை வழிநடத்தி செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்