மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை… அவரே வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:46 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ்.  தெலுங்கு சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  தமிழில் கேடிக்குப் பிறகு  விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. 

இப்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ள இலியானா சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்துவருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் இவர் இப்போது பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று கவனத்தைப் பெற்றுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ”நான் இப்போது நலமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்