முதன் முறையாக விஜய் ஆண்டனி படத்திற்கு இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு!

திங்கள், 6 ஜனவரி 2020 (14:45 IST)
நேற்றும், இன்றும் , என்றும் பின்னணி இசையின் முன்னணி நாயகர் இளையராஜா மட்டும் தான். தற்போது அவரது இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படம் அற்புதமாக உருவாகி வருகிறது.  
 
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஏற்கெனவே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா,  ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இப்படத்தில் ரம்யா நம்பீசன் நடிக்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் அருந்ததி புகழ் நடிகர் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். இவர்களுடன் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். 
 
இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக  இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை லைவ்-ஆக அசத்தி இருக்கிறார் இளையராஜா.
2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை பாடல்களைக் கொண்ட படமாக தமிழரசன் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்