இந்த நிகழ்ச்சியில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் அதிகமாக கவனம் ஈர்த்தது நடிகர் தனுஷ் தனது இரு மகன்களுடன் வந்து கலந்துகொண்டது. இந்த கச்சேரியின் போது ரஜினி நடித்த வள்ளி படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே பாடல் பாடப்பட்டது. அந்த பாடலின் நினைவலைகளைப் பற்றி பேசிய இளையராஜா தனுஷைப் பார்த்து எழுந்து நிற்க சொல்லி இந்த பாடல் சிறப்பாக அமைய உன் மாமனார்தான் காரணம் தனுஷ். ரஜினிகாந்த் ரசனையோடு, காட்சியின் சூழ்நிலையை கூறியதால்தான் பாடல் சிறப்பாக வந்தது எனக் கூறினார். அதைக் கேட்டு தனுஷ் புன்னகைத்தார். சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பியது.