’’இளையராஜாவின் பாடலுக்கு’’ நோய் எதிர்ப்பு சக்தி உண்டு ... பிரபல இசையமைப்பாளர் வீடியோ !

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (14:48 IST)
’’இளையராஜாவின் பாடலுக்கு’’ நோய் எதிர்ப்பு சக்தி உண்டு ... பிரபல இசையமைப்பாளர் வீடியோ !

இளையராஜாவின் பாடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வானமே எல்லை என்ற படத்தில் இயக்குநர சிகரம் இயக்கினார். இப்படத்தில் தான் கீரவாணி என்ற என்ற இசையமைப்பாளர்  தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு அவரது கிரேஸ் எகிறியது. தெலுங்மு சினிமாவில் ஏகப்பட்ட இசையமைத்த அவரது கிரேஸ் எகிறியது.  சில  வருடங்களுக்கு முன், ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான பாகுபலி1, 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்தன் மூலம் கீரவாணியின் புகழ் உலகெங்கும் பரவியது.

இந்நிலையில் அவர் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனிப்புகள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்,என்றனர்.

அதனால் இனிப்புகளை ஒதுக்கிவிட்டேன். அதற்குப் பதிலாக இளையராஜாவின் பாடலைப் படுகிறேன். அந்தப் பாடலைப்  பாடினால் அதிலுள்ள இனிமையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று தெலுங்கு மொழியில் தெரிவித்து, தேனே தென்பாண்டி  மீனே என்ற பாடலை தமிழில் அவர் தனது இனிமையான குரலில் பாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்