கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய விடுதலை படம் இந்த ஆண்டு ரிலிஸாக உள்ளது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜா இசையில் சுகா எழுதிய ஒன்னோட நான் நடந்தா பாடல் தனுஷ் குரலில் சமீபத்தில் வெளியானது.