பத்ம விருதுகளை நான் திரும்ப அளிப்பதாக சொல்லவில்லை! – இளையராஜா விளக்கம்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (18:16 IST)
பத்ம விருதுகளை திரும்ப அளிக்க போவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக வெளியான கருத்து உண்மையில்லை என விளக்கம் தரப்பட்டுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவுடனான பிரச்சினைகளை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா வருத்தத்தில் இருப்பதாகவும், தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதுகளை திரும்ப அளிக்க போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதை இசையமைப்பாளர் தினா கூறியதாக செய்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தினா “இளையராஜாவின் பத்ம விருதுகளை பிரசாத் ஸ்டுடியோ அவமதித்து விட்டார்கள் என்றுதான் கூறினேன். நான் கூறியது திரிக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து விளக்கமளித்துள்ள இளையராஜா “நான் பத்ம விருதுகளை திரும்ப தர போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவை உண்மையில்லை. நான் சொல்லாத கருத்து ஊடகங்களில் பரவி வருகிறது” என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்