‘இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை.. அவர் கேட்பது இதுதான்’ … விஜய் ஆண்டனி ஆதரவு

vinoth

திங்கள், 28 ஏப்ரல் 2025 (09:48 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இதற்கிடையில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என அவர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

இளையராஜாவுக்கு எதிராகப் பேசுபவர்கள் பலரும் அவரைப் பணத்தாசைப் பிடித்தவர் என ஒரே வார்த்தையில் அவதூறு செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இளையராஜா குறித்துப் பேசியுள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில் “இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை. அவர் பல பேருக்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார். பல ஹீரோக்களௌ உருவாக்கியுள்ளார். அவர் கேட்பது எல்லாம் என் பாடல்களைப் பயன்படுத்தும் முன்பு என்னிடம் கேளுங்கள் என்பதுதான். ஒரு இசையமைப்பாளருக்குத் தன்னுடையப் பாடல்கள் குழந்தையைப் போல இல்லையா?. ” என ஆதரவாகப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்