மோடிக்கு பாஜகவினர் வைத்த போஸ்டரில் இளையராஜா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (16:08 IST)
இன்று நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

தமிழகத்தில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் மோடியை வரவேற்கும் விதமாக பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டரில் தமிழக பாஜகவின் பிரமுகர்களின் புகைப்படங்கள் சதுரங்க போட்டியின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் முகம் இடம்பெறும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் அதிசயமாக இளையராஜாவின் உருவமும் ஒரு சிப்பாய் போல உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இளையராஜா ராஜ்ய சபா நியமன எம்பியாக நியமிக்கப்பட்டதால் இப்போது அவரின் உருவமும் இடம்பெற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த போஸ்டர் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்