இரண்டு பாகங்களாக உருவாகிறதா இளையராஜா பயோபிக்?

vinoth

சனி, 20 ஜூலை 2024 (16:49 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் திரைக்கதைக்காக இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவோடு நெருக்கமாக பழகிய தமிழ் சினிமா நட்சத்திரங்களை சந்தித்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகும் தகவல்களின் படி இன்னும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளையராஜா தன்னுடைய கிராமத்தில் இருந்து சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வருவது வரையான பகுதி முதல் பாகமாக உருவாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்