''மாமன்னன்'' படம் திரையிட்டால் தாக்குதல் நடத்தப்படும்- பார்வார்டு பிளாக் கட்சி எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (20:24 IST)
உதயநிதியின் மாமன்னன் படம் திரையிட்டால் தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  மாமன்னன். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இயக்குனர் செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  மாமன்னன் திரைப்படத்தின் முன்பதிவு நேற்று முதல் இணையத்தில் மாமன்னன் படத்துக்கு முன்பதிவு தொடங்கியது.

சமீபத்தில் ரிலீஸான மாமன்னன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  நாளை மறுநாள் இப்படம் ரிலீஸாக உள்ள  நிலையில், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி, ‘’மாமன்னன் படத்தை திரையிட்டால் தேனி வெற்றி  தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்படும்’’ என்று திரையரங்க மேலாளரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்