இளையராஜா இசைப்பள்ளி தொடங்கினால்.. இவர்கள் தான் பேராசிரியர்கள் - முன்னணி இயக்குனர் தகவல்

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (16:03 IST)
.
இசை ஞானி இளையராஜா ஒரு இசைப்பள்ளி தொடங்கவேண்டும் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான படம் அல்போன்ஸ் புத்ரன். இப்படத்தின் வெற்றிக்குப் பின்,  நிவின்பால்- சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் பிரேமம். இப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின், நயன்தாரா   நடிப்பில் கோல்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.

இப்படத்தின் போஸ்ட் புரோடெக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா பற்றி அல்போன்ஸ் புத்ரன் கூறியுள்ளதாவது:

இளையராஜா ஒரு இசைப்பள்ளி தொடங்க வேண்டும். இதில், இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் பேராசிரியர்களாக  பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்