அப்பா பாடல்களை ரீமேக் செய்யும் யுவன்! – வைரலான ரம் பம் பம் பாடல்!
சனி, 2 ஜூலை 2022 (11:52 IST)
சுந்தர்.சி இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “காபி வித் காதல்” படத்தின் ரம் பம் பம் பாடல் வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் நடிக்கும் காமெடி படம் “காபி வித் காதல்” இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், மாளவிகா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீப காலமாக யுவன் ரீமேக்கில் வெளியாகும் இளையராஜா பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது. முன்னதாக “மைக்கெல் மதன காமராஜன்” படத்திலிருந்து “வெச்சாலும் வைக்காம போனாலும்” பாடலை டிக்கிலோனா படத்திற்காக ரீமேக் செய்தார் யுவன். அந்த பாடல் பெரும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் தற்போது அதே மைக்கெல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான “ரம் பம் பம்” பாடலை “காபி வித் காதல்” படத்தில் ரீமேக் செய்துள்ளார் யுவன். இந்த பாடல் நேற்று யூட்யூபில் வெளியான நிலையில் பெரும் வைரலாகி வருகிறது.