பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இடிமுழக்கம்
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது தொழில்நுட்ப திரைப்படம் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மலையாளத்தில் வெளியான லட்சியம் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம். இடம் பொருள் ஏவல் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார்.நன்றி. என்று கூறியுள்ளார்.