நான் ஹீரோவாக நடிக்க தயாராக இல்லை: பிரபல நடிகர் அதிர்ச்சி பேட்டி

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (16:37 IST)
நான் ஹீரோவாக நடித்துள்ளேன், வில்லனாக நடித்துள்ளேன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளேன் என கூறிய பிரபல நடிகர் நான் ஹீரோவாக நடிக்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.


 

 
மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருபவர் மனோஜ் கே விஜயன். இவர் தற்போது மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
 
மலையாளத்திற்கு அடுத்து தமிழ் படங்களில் அதிகம் நடித்துள்ளார். குணச்சித்திர வேடம் மற்றும் வில்லனாக அதிகம் நடித்துள்ளார். விஜய் நடித்த திருமலை மற்றும் திருப்பாச்சி படம் மூலம் தமிழில் அதிகம் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் தற்போது புதுமுக இயக்குநர்கள் பற்றிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
முன்பெல்லம் புதுமுக இயக்குநர்களை பார்த்தாலே ஓடிவிடுவோம். ஆனால் இப்போ அப்படி இல்லை. தற்போது சினிமா பற்றி நன்கு தெரிந்துக்கொண்ட பிறகுதான் துறைக்கு வருகின்றனர்.
 
நான் ஹீரோவாக நடித்துள்ளேன், வில்லனாக நடித்துள்ளேன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளேன் என கூறிய பிரபல நடிகர் நான் ஹீரோவாக நடிக்க தயாராக இல்லை, என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்