சர்கார் படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களோடு பார்க்க ஆசைப்படும் பிரபல நடிகர்

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (09:27 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அரசியல் தான் பிரதானம் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
சர்கார் படம் திரைக்க வரும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.  படம் ரிலீஸ் அன்று அதிகாலை காட்சிகள் முதல் தியேட்டர்கள் திருவிழா போல இருக்கும்.
 
இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் சர்கார் முதல் நாள் முதல் காட்சி தளபதி ரசிகர்களோடு தான் பார்ப்பேன் என கூறியுள்ளார்.
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்