கடந்த வாரத்துக்கு முன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்கள் சென்று வழிபடலாம் என்று தீர்ப்பு கூறியிருந்தது. அதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானமும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக கருத்து தெரிவித்து பெண்கள் வழிபாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்படும் என்று பொறுப்புடன் கூறியிருந்தது.
இது சம்பந்தமாக முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறிய கருத்தில் ’மத சம்பந்தமான பாரம்பர்ய விசயத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது ’என்று கூறியிருந்தார். அவர் கூறிய கருத்தானது சுரீம்கோர்ட்டிம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா கருத்துடன் ஒத்திருந்தது அதாவது: ’பாரம்பரிய ஐயப்ப பக்தர்களின் இந்து அடையாளங்களில் அரசு மற்றும் நீதிமன்றம் தலையிடக் கூடாது’ என்று தன் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருந்த போதிலும் மிகப் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் தீபக் மிஸ்ரா அவர்களுடைய தீர்ப்பு அன்று ஒருமனதாக அளிக்கப்பட்டது.
அதில் மலையாள நடிகரும் பா.ஜ.க ஆதரளவாளருமான கொல்லம் துளசி கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் சபரிமலை கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை திருவனந்தபுர முதர்வர் அலுவலகத்திற்கு ஒன்றும், இன்னொரு துண்டை டெல்லிக்கும் அனுப்பி வைப்பேன் இவ்வாறு அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படி பேசியதையடுத்து அவர் மீது போலீஸாஎ வழக்கு பதிவு செய்துள்ளனர்.